பங்காரு அடிகளார் பிறந்தநாளையொட்டி உலக நன்மைக்காக கோடி அர்ச்சனை வழிபாடு- 15 நாடுகளில் நாளை நடக்கிறது
- இணையதள ஜும் இணைப்பு மூலம் உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளை சேர்ந்த 7000-க்கும் மேற்பட்ட மேல்மருவத்தூர் செவ்வாடை பக்தர்கள் இந்த இணையவெளி கூட்டு வழிபாட்டில் ஒரே நேரத்தில் பங்கேற்க உள்ளனர்.
- நிகழ்ச்சி வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் என்ற உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ பதிவு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83-வது பிறந்தநாள் விழாவையொட்டி உலகம் முழுவதும் உள்ள ஆதி பராசக்தி சித்தர் பீடத்தின் செவ்வாடை பக்தர்கள் உலக நலன் வேண்டி குரு போற்றி மந்திரத்தை கோடி முறை உச்சரித்தும், கோடி முறை அர்ச்சனை செய்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி நாளை (19-ந்தேதி) காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.
இணையதள ஜும் இணைப்பு மூலம் உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளை சேர்ந்த 7000-க்கும் மேற்பட்ட மேல்மருவத்தூர் செவ்வாடை பக்தர்கள் இந்த இணையவெளி கூட்டு வழிபாட்டில் ஒரே நேரத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் என்ற உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ பதிவு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.