உள்ளூர் செய்திகள்

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

Published On 2023-08-27 16:30 IST   |   Update On 2023-08-27 16:30:00 IST
  • நெல் கொள்முதல் நிலையத்தினை திறக்க வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • சாலைமறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உத்திரமேரூர்:

உத்திரமேரூர் அடுத்த ஆலஞ்சேரி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஆலஞ்சேரி, தோட்டநாவல், ரெட்டமங்கலம், மலைக்காலனி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல் பயிரினை விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என நம்பிக்கையுடன் விவசாயிகள் ஆலஞ்சேரி கிராமத்தில் தங்களது நெல் பயிரினை கொட்டி வைத்து அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்காக காத்திருந்தனர். ஒரு மாதத்திற்கு மேலாகியும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை திறக்க வலியுறுத்தி ஆலஞ்சேரி- நெல்வாய் கூட்ரோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சாலைமறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News