ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் திடீர் தீ விபத்து
- கொரோனா வார்டில் இருந்த நோயாளிகளை தீயணைப்பு வீரர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் சேர்ந்து பத்திரமாக மீட்டனர்.
- கொரோனா வார்டில் இருந்த 5 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
சென்னை:
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தற்போதும் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த அளவிலான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ வேகமாக பரவியது. இதனால் நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
கொரோனா வார்டில் இருந்த நோயாளிகளை தீயணைப்பு வீரர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் சேர்ந்து பத்திரமாக மீட்டனர்.
கொரோனா வார்டில் இருந்த 5 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரிய அளவில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் தீ விபத்து ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.