கன்னியாகுமரியில் இன்று அலைமோதிய சுற்றுலா பயணிகள்
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்தனர்.
- அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி:
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் அதிக மானோர் வந்து செல்வது உண்டு.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது.
அவர்கள் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தனர். கடந்த 5 நாட்களாக மழை மேக மூட்டத்தினால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் இன்று மழை மேகம் நீங்கியதைத்தொடர்ந்து தெளிவாகத் தெரிந்தது.
அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடவும் இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட னர்.
கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்ட க்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.