உள்ளூர் செய்திகள்

கோவை காமாட்சிபுரி ஆதீனம் காலமானார்- அண்ணாமலை இரங்கல்

Published On 2024-03-12 12:01 IST   |   Update On 2024-03-12 12:24:00 IST
  • பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில், துணிச்சலுடன் குரல் கொடுத்தவர்.
  • ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர்.

கோவை:

கோவையில் இன்று காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் (55) உடல்நலக்குறைவால் காலமானார். மூச்சுத்திணறலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

டெல்லியில் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் காமாட்சிபுரி ஆதீனமும் கலந்து கொண்டார். விழாவில் பிரதமரிடம் செங்கோல் வழங்கி ஆசி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கோவை காமாட்சிபுரி ஆதீனம், சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இறைவன் திருவடிகள் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில், துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவில் பங்கு கொண்டு பிரதமருக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவர். சிவலிங்கேஸ்வர சுவாமிகளைப் பிரிந்து வாடும் பக்தர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News