உள்ளூர் செய்திகள்

ஜெயச்சந்திரன்

1500 பெண்களை செல்போனில் படம் பிடித்த வேன் டிரைவர் கைது

Published On 2023-07-06 03:49 GMT   |   Update On 2023-07-06 03:49 GMT
  • முருகனை தாக்கி ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார்.
  • ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி வடக்குத்தெரு காலனியை சேர்ந்தவர் முருகன் (43). விவசாய கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பட்டாளம்மன் கோவில் அருகே தனது மனைவி சித்ரா (40) உடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காலனி தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் (28) என்பவர் சித்ராவை தனது செல்போனில் படம் பிடித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த முருகன் அவரிடம் இருந்த செல்போனை பறித்து பார்த்த போது அதில் தனது மனைவியின் புகைப்படம் பதிவாகி இருந்தது குறித்து கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. முருகனை தாக்கி ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனின் செல்போனை வாங்கி சோதனை செய்தார்.

தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரியும் ஜெயச்சந்திரன் பள்ளி, கல்லூரி மாணவிகள் புகைப்படம் உள்பட தெருக்களில் நடந்து செல்லும் பெண்களின் புகைப்படம் என மொத்தம் 1500 போட்டோக்களை பதிவு செய்து வைத்திருந்தார். இதனை அவர் எதற்காக பதிவு செய்து வைத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News