உள்ளூர் செய்திகள் (District)

ஒகேனக்கல்லில் விஷம் குடித்து கிராம நிர்வாக உதவியாளர் தற்கொலை

Published On 2023-11-23 04:00 GMT   |   Update On 2023-11-23 04:00 GMT
  • சபரிமலைக்கு மாலை அணிவதாக கூறி ஒகேனக்கல்லுக்கு வந்த கிராம நிர்வாக உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒகேனக்கல்:

தருமபுரி மாவட்டம் சோமனஅள்ளி ஆதி திராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகண்ணன் (வயது 50). இவருக்கு திருமணமாகி சாலம்மாள் (47) என்ற மனைவியும், அருளேஷ் (31), ஜெயசீலன் (24) என்ற மகன்களும், ஜெயகிருபா (26) என்ற மகளும் உள்ளனர்.

ஜெயகண்ணன் இண்டூர் கிராம நிர்வாக உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

ஜெயகண்ணனின் இளைய மகன் ஜெயசீலன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஜெயகண்ணன் மனவேதனையுடன் காணப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சபரிமலைக்கு மாலை அணிவிப்பதாக கூறிவிட்டு ஒகேனக்கல் வந்திருந்த ஜெயகண்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனே ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து ஜெயகண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகண்ணன் தனது மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News