உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2022-06-27 05:16 GMT   |   Update On 2022-06-27 05:16 GMT
  • குடிநீர் பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.
  • பெண்கள் ஒரு குடம் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஊராட்சிக்குட்பட்ட மாதாநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பெண்கள் ஒரு குடம் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது.

குடிநீர் பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய கோரியும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் அப்பகுதி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் போலீஸ் இக்ன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News