உள்ளூர் செய்திகள்
திருட்டு நடந்த வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கிறது.
பூட்டிய வீட்டில் 3 பவுன் தங்க செயின் திருட்டு
- ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டு புடவைகள் ஆகியவை திருட்டு.
- நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
நீடாமங்கலம்:
திருவிடைமருதூர் உட்கோட்டம், நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட பழவாத்தான்கட்டளை, பாரதி நகர் தெற்கு, நேதாஜி தெருவை சேர்ந்தவர் முகில் (வயது 38).
இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார்.
இந்நிலையில், காலை வீட்டின் கீழ் பகுதியில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டிருந்து.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டு புடவைகள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.