மூதாட்டியிடம் 7 பவுன் நகை கொள்ளை
- மயக்க பொடி தூவி துணிகரம்
- போலீசார் தீவிர விசாரணை
செங்கம்:
செங்கம் அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சென்னம்மாள் (வயது 70). இவர்கள் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
வீட்டின் அருகே சென்னம்மாள் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனை காரில் 2 ஆண்களுடன் வந்த மர்மபெண் நீண்ட நேரமாக சென்னம்மாளை நோட்டமிட்டார்.
திடீரென அந்த பெண் சென்னம்மாளிடம் சென்று உங்களுடைய கணவரிடம் நான் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன், அதனை திருப்பி தருவதற்காக வந்துள்ளேன் என்று கூறினார்.
இதனால் செல்லம்மாள் அவர்களை வீட்டின் முன் அழைத்து சென்றார்.
பின்னர் அவர்கள் கொடுத்த ரூ.2 ஆயிரத்தை கையில் வாங்கினார். அந்த நேரத்தில் மூதாட்டி மீது மயக்கபொடி தூவினர். சிறிது நேரத்தில் சென்னாம்மள் மயங்கி கீழே விழுந்தார். சிறிது நேரத்திற்குப் பின்பு மயக்க நிலையில் இருந்து மீண்டு எழுந்து பார்த்தார்.
அப்போது அந்த மர்ம பெண்ணும் அவர்களுடன் இருந்த 2 பேரும் மாயமாகி உள்ளனர். மேலும் கட்டில் அடியில் வைத்திருந்த 7 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னம்மாளின் கணவர் பாலகிருஷ்ணன் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியிலும் இதே போல அந்த மர்ம பெண் தனியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியிடம் உறவினர் என்று கூறி 8 பவுன் நகை கொள்ளையடித்த சென்றுள்ளனர்.
இதே போல கலசப்பாக்கம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் துக்கம் விசாரிப்பது போல் காரில் வந்து கதறி அழுது பெண் 13 பவுன் நகையை நேற்று திருடி சென்று விட்டனர்.
இந்தப் பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.