உள்ளூர் செய்திகள்
ஆசிரியர் வீட்டில் புகுந்த நல்ல பாம்பு
- படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு
- ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்
வந்தவாசி:
வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் கே.எம்.நகரை சேர்ந்தவர் நடராஜன்.
இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இந்த நிலையில் தனது வீட்டுத் தோட்டத்தில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். பாம்பை பிடிக்க முயன்ற போது திடீரென நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பை பொன்னூர் காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.