உள்ளூர் செய்திகள்
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புரந்தீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ இந்திரபிரசாதவள்ளி அம்மனுக்கு ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு லட்சார்ச்சனை வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ புரந்தீஸ்வரருக்கும் ஸ்ரீ இந்திர பிரசாத வள்ளி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமான பால் தயிர் பன்னீர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து குடும்பத்தில் கஷ்டங்கள் நீங்கி மனநிம்மதி பெறுவதற்கும் ஸ்ரீ இந்திர பிரசாத வள்ளி அம்மனுக்கு பக்தர்களின் கைகளால் லட்சார்ச்சனை செய்து வழிபட்டனர்.
மங்கள மேல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ இந்திர பிரசாத வள்ளி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.