செய்யாறில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
- மதுரை எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து விளக்கினர்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மண்டி தெருவில் நடைபெற்றது.
நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் ஜனார்த்தனம், ரவிச்சந்திரன், அருணகிரி, பூக்கடை கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், சேவூர் எஸ். ராமச்சந்திரன் கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, கழகப் பேச்சாளர் சிட்கோ சீனு ஆகியோர்கள் கலந்து கொண்டு அண்ணாவின் அரசியல் வாழ்வு, அரசியல் பண்பாடு, நாகரிகம், தற்போதைய ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி பேசினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அரங்கநா தன், மகேந்திரன், குணசீலன், துரை, மற்றும்தணிகாசலம், சுரேஷ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.