முன்னாள் ராணுவ வீரர் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைப்பு
- மனைவி -மாமியார் மீது வழக்கு
- கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து, மனைவி வாழ்ந்து வந்தார்
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (45) ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.
இவரது மனைவி உஷாராணி (37). தம்பதியினருக்கு பரத்குமார் (13) என்ற மகனும், காவியஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர்.
சுரேஷிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உஷாராணி, கணவனை பிரிந்து கண்ண மங்கலம் அருகே உள்ள அர்ச்சுனாபுரம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி சுரேஷ் தனது மாமியார் வீட்டிற்கு சென்று, மனைவி உஷாராணியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். கணவன், மனைவி இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த உஷாராணி மற்றும் அவரது அவரது தாய் பூஷணம் ஆகிய 2 பேரும் சேர்ந்து,' நீ செத்தால் தான் எங்களுக்கு நிம்மதி' என கூறி, சுரேஷ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர்.
தீக்காயங்களுடன் அலறியபடி தெருவுக்கு வந்த சுரேஷை, அப்பகுதி மக்கள் காப்பாற்றி, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் அடுக்க ம்பாறை அரசு மருத்துவ மனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.
இதுகுறித்து சுரேஷ் தந்த வாக்கு மூலத்தின் பேரில் கண்ண மங்கலம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மகாலட்சுமி, உஷாராணி, பூசணம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.