- கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- மாணவர்கள் கழிப்பறை கட்டிடம் கட்டித்தர கோரிக்கை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கல்பட்டு, வேடக்கொல்லைமேடு, குப்பம், கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், படவேடு உள்பட பல்வேறு கிராமங்களில் நேற்று கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. வருகைதந்து மக்கள் குறை கேட்டு மனுக்கள் பெற்றார்.
குப்பம் கிராமத்தில் அரசு மேநிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
வாழியூர் ஊராட்சியில், ரூ.14.67 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கிடங்கு, காளசமுத்திரம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், பள்ளக்கொல்லை புதிய பால் கூட்டுறவு சங்க கட்டிடம் உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆர் வி சேகர், போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், வாழியூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதாவெங்கடேசன், படவேடு தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் தஞ்சிம்மாள்லோகநாதன், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக படவேடு கோட்டக்கரையில் கன்று விடும் திருவிழாவையும் எம்.எல்.ஏ. சரவணன் துவக்கி வைத்தார்.
இதேபோல் கண்ணமங்கலம் அருகே அமிர்தி வன உயிரியல் பூங்கா செல்லும் வழியில் உள்ள வேடக்கொல்லைமேடு அரசு மேநிலைப்பள்ளியில் சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கு சுற்றுச்சுவர், மாணவ மாணவிகள் கழிப்பறை கட்டிடம் கட்டித்தர கோரிக்கை மனு அளித்தனர்.