உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் பசு மாடுகளிடம் மனு அளித்த காட்சி.

பசுமாடுகளிடம் மனு அளித்து போராட்டம்

Published On 2023-07-24 15:17 IST   |   Update On 2023-07-24 15:17:00 IST
  • 10-அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும்
  • 250-க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், 10-அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும் என 20-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

19-வது நாளாக நேற்று 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மாடுகளிடம் மனு அளித்து போராட்டம் செய்தனர். மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், செயலாளர் ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன் என்கின்ற கோபி, கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன், அமைப்பு செயலாளர் நடராஜன்உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் நாகப்பட்டினம் தமிழ்செல்வன், டெல்டா மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் வேதாரண்யம் பார்த்தசாரதி ஆகியோர் கலந்துகொண்டு 10-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனதமிழக அரசை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில், இயற்கை வேளாண்மை விவசாயிகள் கீழ்பென்னாத்தூர் கோதண்டராமன், சமூக ஆர்வலர்கள் ராஜாதோப்பு பலராமன், கனகராஜ், கார்த்திகேயன், சகாதேவன், கோவிந்தன், அர்ச்சுனன், கணியாம்பூண்டி வரதராஜன், மகளிர் அணி நிர்வாகிகள், முன்னோடி விவசாயிகள் காமராஜ்நகர் சதாசிவம், அசோக்குமார், நாரியமங்கலம் க.சா.முருகன் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து இன்று (20-வது நாளாக) போராட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News