ரூ. 24.13 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைகள், புதிய ரேசன் கடை கட்டிடம்
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யாறு ஒன்றியம் விண்ணவாடி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை, கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை ஆகியன அமைக்கப்பட்டு இருந்தன.
அதேப் போல அரும்பருத்திக் கிராமத்தில் ரூ.9.13 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடைக் கட்டடமும் கட்டப்பட்டது. இவைகளின் திருவிழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமைத் தாங்கினார். அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றியக் கவுன்சிலர் வி.ஏ.ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு இரண்டு தார்சாலை மற்றும் புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்யாறு கல்வி மாவட்டம் பள்ளி அரசு மேநிலைப் பள்ளியில் 63 மாணவர்களுக்கும், நெடும்பிறை அரசு பயிலும் மாணவர்கள் 45 என மொத்தம் 108 பேருக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச சைக்கிள் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கவுன்சிலர் கே.மகாராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நடராஜன், தீபா ராபர்ட், நகர மன்ற உறுப்பினர்கள் ரவி, பேபி ராணி பாபு, திமுக நிர்வாகிகள் அன்பழகன், மா.கி வெங்கடேசன், ஜே.ஜே. ஆறுமுகம், சுந்தரேசன், பார்த்தீபன் தயாளன், அருள், சக்திவேல், துரை, கருணாநிதி, பா.க. மணிவ ண்ணன், அசோக், மங்கலம் பாபு, தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.