உள்ளூர் செய்திகள்
வாணியம்பாடியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
- ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் மனோகரன்.
இவரது மகள் சத்யா (வயது 19). இவர் வாணியம்பாடியில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள் ளார். இதனால் அவரை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சத்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீ சார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.