உள்ளூர் செய்திகள்

முதியோர் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-09-05 09:43 GMT   |   Update On 2022-09-05 09:55 GMT
  • சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது
  • கலெக்டர் தகவல்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனா ளிகள் உதவித்தொகை, கணவ னால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை மற்றும் ஆதர வற்ற விதவை உதவித்தொகை பெற விரும்பும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டை, கலர் புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எண், குடும்ப அட்டை, செல்போன் எண் ஆகிய உரிய அசல் ஆவணங்களுடன் அருகில் உள்ள இ - சேவை மையத்திற்கு சென்று ஆன்லைனில் பதிவு செய்து பயன்பெறு மாறு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித் துள்ளார் .

Tags:    

Similar News