உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தில் 10 ஆயிரத்து 250 பேர் பயன் பெற்றனர் - கலெக்டர் தகவல்

Published On 2023-04-13 11:58 GMT   |   Update On 2023-04-13 11:58 GMT
  • 4 ஆயிரத்து 800 எண்ணிக்கையில் காய்கறி விதை தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

 திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அன்றாடம் தங்களுக்கு தேவையான காய்கறிகள், கீரைகள் மற்றும் மூலிகை செடிகளை தங்கள் வீடுகளில் இடவசதிக்கேற்ப உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் இந்த திட்–டம் செயல்படுத்தப்படுகிறது

இந்த திட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 250 எண்ணிக்கையில் மாடித்தோட்டம், ஊரக பகுதிகளில் 2,500 எண்ணிக்கையில் காய்கறி விதை தொகுப்புகள், 4 ஆயிரத்து 500 எண்ணிக்கையில் ஊட்டச்சத்து விதை தொகுப்புகள் என ரூ.20 லட்சத்து 13 ஆயிரம் மானியத்தில் 10 ஆயிரத்து 250 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு திட்டத்தில் 4 ஆயிரத்து 800 எண்ணிக்கையில் காய்கறி விதை தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 எண்ணிக்கையில் மூலிகை தோட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அறிந்து கொள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News