உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை

Published On 2023-11-02 15:53 IST   |   Update On 2023-11-02 15:53:00 IST
  • மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இரவு திடீரென பலத்த மழை பெய்தது.
  • வெப்பம் தணிந்து. குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

திருப்பூர்:

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கியது. மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இரவு திடீரென பலத்த மழை பெய்தது.

திருப்பூர் ,அவிநாசி, மங்கலம் ,பல்லடம் ,உடுமலை என மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. ஒரு சில இடங்களில் மழையானது தொடர்ச்சியாக பெய்து வருகிறது .இதனால் வெப்பம் தணிந்து. குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு திருப்பூர் வடக்கு பகுதியில் 50.50 மில்லி மீட்டர், தெற்கு பகுதியில் 7.40 மில்லி மீட்டர், ஊத்துக்குளி 20.40 மில்லி மீட்டர், மடத்துக்குளம் 10 மில்லி மீட்டர், மூலனூர் 37 மில்லி மீட்டர், தாராபுரம் 16 மில்லி மீட்டர் என மொத்தம் 248.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

Tags:    

Similar News