காமராஜர் விருதுக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய உத்தரவு
- மாணவர்களின் கல்வி செயல்பாடு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது.
- போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் காமராஜர் விருதுக்கு பரிந்துரைக்க ப்படுகின்றனர்.
திருப்பூர்:
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் கல்வி செயல்பாடு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 15 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 10 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ், பிளஸ் 2 பயிலும் சிறந்த 15 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 20 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் காமராஜர் விருதுக்கு பரிந்துரைக்க ப்படுகின்றனர். நடப்பாண்டுக்கான காமராஜர் விருது குறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் தரப்பில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி விருதுக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியலை பள்ளி கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.