ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
- சரக்கு ஆட்டோவில் இருந்து 1,850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
- கோவை மாவட்டம், மாதம்பட்டியை அடுத்த குப்பனூரை சோ்ந்த ஜி.காா்த்திகேயன் (வயது 32) என்பவரை கைது செய்தனா்.
திருப்பூர்:
திருப்பூா் மாநகரில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய கோவையை சோ்ந்த வாலிபர் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா், பல்லடம் சாலையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினா் கடந்த 10 ந் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் சரக்கு ஆட்டோவில் இருந்து 1,850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக கோவை மாவட்டம், மாதம்பட்டியை அடுத்த குப்பனூரை சோ்ந்த ஜி.காா்த்திகேயன் (வயது 32) என்பவரை கைது செய்தனா். இவா் தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கும்படி மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காா்த்திகேயனிடம் காவல் துறையினா் நேரில் வழங்கினா் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.