உள்ளூர் செய்திகள்
செஞ்சேரிமலை வேலாயுத சுவாமி கோவிலில் வளர்பிறை சஷ்டி விழா
- விரைவில் திருமணம் நடைபெற செவ்வரளி மற்றும் செவ்வாழைப்பழம் வைத்து ஜாதகத்துடன்வைத்து வழிபட்டனர் .
- ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வேலாயுத சாமியை தரிசனம் செய்தனர்.
உடுமலை :
உடுமலை அடுத்துள்ள செஞ்சேரிமலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த மந்திரகிரிஸ்ரீ வேலாயுத சாமி கோவிலில் வளர் பிறை சஷ்டியை முன்னிட்டு திரிசங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடந்தது.
மழை , உலக நன்மை,கல்வி, விவசாயம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ,திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வேலாயுத சாமியை தரிசனம் செய்தனர்.
விரைவில் திருமணம் நடைபெற செவ்வரளி மற்றும் செவ்வாழைப்பழம் வைத்து ஜாதகத்துடன்வைத்து வழிபட்டனர் . இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.