கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இலாபகரமான விலை வழங்க வலியுறுத்தினர்
திருச்சி:
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பருத்தி மற்றும் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் தமிழ்நாடு அரசு மக்காச்சோளம் கிலோ ஒன்றுக்கு ரூ.21.50 காசுக்கும், பருத்திக்கு 75 ரூபாயும் வழங்குகிறது. படைப்புழு தாக்குதல் உள்ளிட்டவற்றால் ஏற்கனவே பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த நிலையில் விலையும் குறைவாக வழங்கும் போது கூடுதல் பாதிப்பை தான் விவசாயிகள் சந்திக்கின்றனர். எனவே பருத்திக்கு ரூ.100ம், மக்காச்சோளத்திற்கு ரூ30 ம் உயர்த்தி வழங்க வேண்டும். விலையை உயர்த்தி வழங்கினால் மட்டுமே விவசாயிகள் லாபகரமாப தொகை பெற முடியும் என தெரிவித்து மக்காச்சோளம் மற்றும் பருத்தியை திருச்சி மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சென்னையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.