உள்ளூர் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூரை அடுத்த கீழ் கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரது நிலத்தில் உள்ள சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் நேற்று மாலை புள்ளி மான் ஒன்று விழுந்து.
பின்னர் அப்பகுதியினர் மான் தத்தளித்துக் கொண்டு இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி புள்ளி மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், வனத்துறை அலுவலர் இந்து உத்தரவின்பேரில் மீட்கப்பட்ட புள்ளி மானை அருகே உள்ள பரவமலை காப்புக்காட்டில் கொண்டு விட்டனர்.