வடசேரி கோவில் திருவிழாக்களில் விஜய் வசந்த் எம்.பி. தரிசனம் செய்தார்
- சிறப்பு குழந்தைகளுக்காக சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட பள்ளி பேருந்தினை துவக்கி வைத்தார்.
- மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் வின்சென்ட் மார்க் புவலோஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி:
வடசேரி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஒம் சக்தி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆகிய கோவில் திருவிழாக்களில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
சிறப்பு குழந்தைகளுக்கான HOM சிறப்பு பள்ளி வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழகத்திலே முதன்முறையாக சிறப்பு குழந்தைகளுக்காக சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட பள்ளி பேருந்தினை இந்த விழாவில் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் வின்சென்ட் மார்க் புவலோஸ், எம்.சி.எக்ஸ். துணைத் தலைவர் முத்தப்பா, திருச்சி துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற சார்பு நீதிபதி எம்.ஜெய்சங்கர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, பெனடிக் பிரான்சிஸ், டாப்கோ நிர்வாக இயக்குனர் வி. சுதாகர், ஜெயராஜ் ட்ரக்ஸ் அண்ட் பஸ்ஸஸ் பிரைவேட் லிமிடெட் இணை துணைத்தலைவர் சங்கர், HOM பள்ளி தலைமை ஆசிரியர் டென்னிஸ், ரெஸ்பி டெக்னாலஜி நிர்வாக இயக்குநர் டி.பினு உட்பட பலர் கலந்துகொண்டனர்.