தீயணைப்பு நிலைய அதிகாரி சீனிவாசன் தேசியக்கொடி ஏற்றினார்.
ராஜபாளையத்தில் குடியரசு தினவிழா
- ராஜபாளையத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
- பள்ளி செயலர் பாலசுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம், அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா நடந்தது. மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ரமேஷ் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம் ராமசுப்பிரமணியராஜா முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி விவே கானந்த கேந்திரத்தில் மாநில அளவில் நடந்த நாடகப்போட்டியில் முதல்பரிசு பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
தேசிய மாணவர் படை மற்றும் சாரணர் இயக்க மாணவ தொண்டர்கள் நிகழ்த்திய அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக்கொண்டனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா,
என்.கே.ராம்வெங்கட் ராஜா, ராஜவேல்.சிவ குமார், செல்வ அழகு, சங்கிலி விக்ரம், கருத்தாளர் சிவகுமார், பழனியப்பன், ராமசாமி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராஜபாளையம் முடங்கியார்ரோட்டில் பொன்விழா மைதானம் அருகில் உள்ள பண்ணையார் ஆர்ச் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் வந்து சென்ற புனித தலமான சுதந்திர தின நினைவு வளைவு கொடிக்கம்பத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றபட்டது.
ராஜுக்கள் கல்லூரி தேசிய மாணவர்படை மாணவர்கள், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் முன்னிலையில் ராஜபாளையம் தீயணைப்புநிலைய அதிகாரி சீனிவாசன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதற்கான ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் செய்திருந்தார்.
வைமா கல்விக் குழுமப் பள்ளிகளில் ஒன்றான வைமா வித்யால யாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். முதல்வர் கற்பகலட்சுமி தேசியக் கொடி ஏற்றினார். 3-ம் வகுப்பு மாணவர் ருசித் வசீகரன், 2-ம் வகுப்பு மாணவர் அகிலேஷ் குடியரசு தினம் பற்றி பேசினர். 2-ம் வகுப்பு மாணவர் எழிலின்பன் தேச பக்தி பாடல் பாடினார்.
5-ம் வகுப்பு மாணவி அமிர்தா குடியரசு தின கவிதை வாசித்தார். பிரி.கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. மாணவர்கள் தேசத் தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்தனர். மாணவிகள் நடனம் ஆடினர். விழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன்.மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் வழிகாட்டுதலின்படி விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.
ராஜபாளையம் பச்சமடம் திருவனந்தபுரம் தெருவில் உள்ள ராமலிங்கவிலாஸ் ஜெயராம் தொடக்க பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை வாசுகி வரவேற்றார்.
பள்ளி செயலர் பால சுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 31-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அவருக்கு பள்ளி செயலர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.