உள்ளூர் செய்திகள்
ஆண்டாள் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடக்கம்
- ஆண்டாள் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது.
- 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் திருவேங்கமுடையான் சன்னதியில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சந்தனகாப்பு சாற்றப்பட்டு, புஷ்ப ஆடை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின் மாடவீதிகள் வழியாக சென்று நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் கோவில் தெப்பத்தில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளினர்.
அங்கு ஆண்டாள் பெயரில் இயற்றப்பட்ட கோதாஸ்துதி பாசுரம் பாடப்பட்டு, ஆண்டாள்-ரங்மன்னார் தெப்பத்தை வலம் வந்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் திருவேங்கமுடையான் சன்னதியில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளுகின்றனர்.