உள்ளூர் செய்திகள்

மணக்குள விநாயகர் கோவிலுக்கு ஜப்பான் ஆன்மிக குழுவினர் வருகை

Published On 2024-08-22 04:48 GMT   |   Update On 2024-08-22 04:48 GMT
  • விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பக்தியுடன் தரிசனம் செய்தனர்.
  • மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

புதுச்சேரி:

விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி திதியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். அதன்டி இன்று அனைத்து விநாயகர் கோவில்களிலும் மஹா சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

கோவிலில் வெளி பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கூட்ட நெரிச்சலை தவிர்க்க மூலவருக்கு அர்ச்சனை செய்யாமல் உற்சவருக்கு மட்டும் வெளியே அர்ச்சனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு இடைவிடாத அன்னதானம் வழங்கப்படட்டது.

ஜப்பான் நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ஆன்மீக குழுவினர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வருவர். 25 பேர் கொண்ட ஜப்பான் நாட்டு ஆன்மீக குழுவினர் விநாயகர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் மணக்குள விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பக்தியுடன் தரிசனம் செய்தனர்.

ஜப்பான் நாட்டு குழுவினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்யப்பட்டது. 

Tags:    

Similar News