- காரமடை-மஞ்சூர் சாலையில் கூட்டமாக சுற்றி திரிகிறது
மேட்டுப்பாளையம்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மேட்டுப்பா ளையம் காரமடை சிறுமுகை பகுதியில் எண்ணற்ற வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
குறிப்பாக காட்டுயானை, மான், கரடி, சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சாலை யை கடக்கும் யானைகள் விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில் காரமடை- வெள்ளியங்காடு சாலையில் ஓரமாக யானை கூட்டம் ஒன்று குட்டியுடன் உலா வந்தது.
இதனை வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ க்கள் சமூக வலைத்த ளங்களில் வைரலாக பரவி வருகிறது.