உள்ளூர் செய்திகள்

மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளதை படத்தில் காணலாம்.

பாவூர்சத்திரம் அருகே ஆபத்தான நிலையில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அகற்றப்படுமா?- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-03-28 14:39 IST   |   Update On 2023-03-28 14:39:00 IST
  • மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.
  • கோவிலின் வளாகத்திற்கு தினமும் சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

தென்காசி:

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலா பேரி கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வளாகத்திற்குள் குறும்பலாபேரி கிராம மக்களுக்கு குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு அதன் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அடியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் பில்லர்கள் அனைத்தும் கம்பிகள் வெளியில் தெரியும் வண்ணம் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.

கோவிலின் வளாகத்திற்கு தினமும் சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கிறார்கள். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர் தேக்க தொட்டியை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறும்பலாபேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News