உள்ளூர் செய்திகள்
ேயாகாவில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளை படத்தில காணலாம்.
திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதின கொண்டாட்டம்
- திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது.
- பள்ளியின் முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் 3-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றிய மையாமை குறித்து விளக்கமளித்து பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து சிறப்புப் பயிற்சி அளித்தனர். மாணவர்கள் சூரிய நமஸ்காரம், விருட்சாசனம், வஜ்ராசனம், வீரபத்ராசனம், உஸ்தாசனம், யோகமுத்ரா போன்ற பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.
பின்னர் பள்ளியின் பின்னர் பேசிய முதல்வர் எலிசபெத் யோகாசனத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து தொடர்ந்து மாணவர்கள் யோகாசனம் செய்துவர அறிவுறுத்தினர்.