திசையன்விளையில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு பஸ்சில் உடன்குடிக்கு முன்பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், வியாபாரிகள் கோரிக்கை
- உடன்குடி பகுதியில் உள்ள வியாபாரிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
- மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரியுடன் கலந்து முடிவு செய்வதாக கூறினார்.
உடன்குடி:
தமிழக மீன்வளம் மீனவர் நலன்மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடியில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்தார். அப்போது உடன்குடி பகுதியில் உள்ள வியாபாரிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திசையன்விளையில் இருந்து தினசரி மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு உடன்குடி வந்து பின்பு குலசை, திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை, வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பஸ் உடன்குடியில் முன்பதிவு செய்வதில்லை. உடன்குடியில் வைத்து பஸ்சில் ஏறினாலும். ரூ.620 திசையன்விளையில் உள்ள டிக்கெட் தான் போடு கிறார்கள். உடன்குடிக்கு என்று முன்பதிவு செய்வ தில்லை. மேலும் உடன்குடிக்கு தனியாக கட்டணம் வசூல் செய்ய வேண்டும். இந்த பஸ் திடீரென மாற்று வழியில் செல்லும் நிலை வரும். புதுச்சேரி செல்லும் அரசு பஸ்சில் உடன்குடிக்கு முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரியுடன் கலந்து முடிவு செய்வதாக கூறினார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் பாலாசிங், இளங்கோ, அஸ்ஸாப் அலி பாதுஷா, மால் ராஜேஷ் உட்பட பலர் உடன் இருந்தனர்.