உள்ளூர் செய்திகள்
மூலைக்கரைப்பட்டி அருகே இளம்பெண் மாயம்
- சுதா வீட்டில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
- பல்வேறு இடங்களில் தேடியும் சுதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சுருளையை சேர்ந்தவர் வேலாயுதம் மகள் சுதா (வயது 21). பிளஸ்-2 படித்துள்ள சுதா வீட்டில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த சுதா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சுதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை வேலாயுதம் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சுதாவை தேடி வருகின்றனர்.