செய்திகள்

என்.ஐ.டி கல்லூரியை பள்ளத்தாக்கிற்கு வெளியே மாற்ற மாட்டோம்: ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங்

Published On 2016-04-10 00:33 GMT   |   Update On 2016-04-10 00:33 GMT
சர்ச்சைக்குள்ளான என்.ஐ.டி கல்லூரியை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வெளியே மாற்ற மாட்டோம் என்று அம்மாநில துணை முதல்வர் நிர்மல் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெளியேறியதை அடுத்து ஸ்ரீநகர் என்.ஐ.டி. வளாகத்தில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. உள்ளூர் மாணவர்களுக்கும், வெளிமாநில மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து வளாகத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையானது அதிகாரிகள் வகுப்புகளை சஸ்பெண்ட் செய்யும் நிலைக்கு தள்ளியது. இதற்கிடையே மீண்டும் வளாகத்திற்குள் பதட்டமான நிலை ஏற்பட்டது. மத்திய ரிசர்வ் படை வீரர்கள் குவிக்கப்பட்டு பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது.

இதனிடையே கல்லூரியினை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும் கோரிக்கைகள் ஏற்பட்டன.

இந்நிலையில், என்.ஐ.டி கல்லூரியை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வெளியே மாற்ற மாட்டோம் என்று அம்மாநில துணை முதல்வர் நிர்மல் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், “மற்ற மாநிலங்களிலில் இருக்கும் காஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும். அரசியல் சர்ச்சைக்காகவும், பிரச்சனைக்காகவும் எந்தவொரு குழந்தைகளும் பாதிக்கப்படக் கூடாது.

காஷ்மீர் அரசு என்.ஐ.டி கல்லூரியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் கண்காணித்து வருகிறது. விரைவில் பழைய சூழ்நிலை திரும்பும்.

எங்களது கல்வித் துறை மந்திரி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை மந்திரி ஸ்மிருதி ரானி ஆகியோர் போராட்டம் நடத்திய மாணவர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளனர்” என்றும் கூறினார். 

Similar News