செய்திகள்

மத்திய மந்திரி வீட்டில் காவலுக்கு இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published On 2016-05-16 03:09 GMT   |   Update On 2016-05-16 03:09 GMT
மத்திய மந்திரி உமா பாரதியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:

மத்திய மந்திரி உமா பாரதியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அசோகா சாலையில் உள்ள உமா பாரதியின் வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தவர், பிரிஜ்பால். டெல்லி பாதுகாப்புப் படை போலீஸ் பிரிவை சேர்ந்த தலைமை காவலரான இவர் நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் பணியில் இருந்தபோது போலீஸ் காரில் அமர்ந்தபடி, தனது கைதுப்பாக்கியால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.

சப்தம் கேட்டு அங்கு விரைந்துசென்ற மற்ற போலீசார், ரத்தவெள்ளத்தில் விழுந்துகிடந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வரும்வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  

Similar News