செய்திகள்

அடுத்த 3 ஆண்டுகளுக்கு யூரியா விலை உயராது: மத்திய மந்திரி தகவல்

Published On 2016-06-15 01:22 GMT   |   Update On 2016-06-15 01:22 GMT
அடுத்த 3 ஆண்டுகளுக்கு யூரியாவின் விலையை உயர்த்துவது இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக மத்திய ரசாயன மற்றும் உரத்துறை ராஜாங்க மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் அர் கூறியுள்ளார்
பெர்காம்பூர் :

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் நகரில் நேற்று நடந்தது. இதில் சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜூ, மத்திய ரசாயன மற்றும் உரத்துறை ராஜாங்க மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் அர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் அர் கூறியதாவது:-

மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு உள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளுக்கு யூரியாவின் விலையை உயர்த்துவது இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இதேபோல் அனைத்து வகை உரங்களும் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேம்பு பூசப்பட்ட யூரியாவை பயன்படுத்த விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகை யூரியாவுக்கு முதலீடு குறைவு. அதேநேரம் அதிக விளைச்சல் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News