செய்திகள்

நாடு முழுவதும் பறக்கும் நகைக்கடைகள்: செம்மனூர் குழுமம் அறிமுகப்படுத்துகிறது

Published On 2016-06-29 09:17 GMT   |   Update On 2016-06-29 09:17 GMT
‘பறக்கும் நகைக்கடை’ என்ற பெயரில் வாகனத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள நகைக்கடையின் மூலம் நாடு முழுவதும் அரியவகை வைரங்கள் மற்றும் நவீனரக தங்க நகைகளை விற்பனை செய்ய பாபி செம்மனூர் நகைக்கடை குழுமம் தீர்மானித்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், கோழிக்கோடு நகர பஸ் நிலையம் அருகே நாளை அறிமுகப்படுத்தும் இந்த நகைக்கடையில் ஒரு சவரன் தங்க நகைகளை வாங்குபவர்களுக்கு ஒரு குடை உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல வாகன வடிவமைப்பாளர் திலிப் சாப்ரியாவால் வடிவமைக்கப்பட்ட இந்த நடமாடும் நகைக்கடை வாகனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு முக்கிய பெருநகரங்களில் முகாமிட்டு உலகின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட அரியவகை வைரங்கள் மற்றும் நவீனரக தங்க நகைகளை விற்பனை செய்யவுள்ளதாக செம்மனூர் நகைக்கடை குழுமத்தின் தலைவரான டாக்டர் பாபி செம்மனூர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இதேபோல் ஒரு பறக்கும் நகைக்கடை இயங்கி வந்தாலும், இந்தியாவில் நகைக்கடை அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News