செய்திகள்

பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, ராகுல் பிறந்தநாள் வாழ்த்து

Published On 2016-09-17 08:28 GMT   |   Update On 2016-09-17 08:28 GMT
பிரதமர் நரேந்திர மோடியின் 66-வது பிறந்தநாளையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:

இதுதொடர்பாக,  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்தநாள் பிரதமரின் வாழ்விலும், நமது நாட்டின் வளர்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை படைக்கும் ஆண்டாக தொடங்கட்டும். இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடி, நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், பல்லாண்டு காலம் வாழ்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வாழ்த்துகிறேன். என குறிப்பிட்ட்டுள்ளார்.

இதேபோல், வெனிசுலா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரியும் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார். மேலும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் ஆகியோரும் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Similar News