செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சந்திப்பு

Published On 2016-10-16 08:58 GMT   |   Update On 2016-10-16 08:57 GMT
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சிறிசேனா சந்தித்து பேசினார்.

பனாஜி:

கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் இலங்கை அதிபர் மைத்ரி பாலசிறிசேனா பார்வையாளராக கலந்து கொண்டார். அதற்காக நேற்று இரவு விமானம் மூலம் பனாஜி வந்தார்.

இன்று காலை அவர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருநாடுகளின் உறவு மேம்பாடு, மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் 2 நாடுகளுக்கு இடையேயான மீனவர் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் உலக அளவில் பெருகி வரும் தீவிரவாதத்தை வேரறுப்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் சீன அதிபர் ஜின்பிங்கையும் மோடி சந்தித்து பேசினார். அப்போது தீவிரவாதம் ஒழிப்பு குறித்து இருவரும் விவாதித்தனர்.

Similar News