செய்திகள்

கான்பூர் ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு - ரெயில்வே மந்திரி நேரில் ஆய்வு

Published On 2016-11-20 14:58 GMT   |   Update On 2016-11-21 05:42 GMT
கான்பூர் ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
லக்னோ:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில், இன்று அதிகாலை 3.10 மணியளவில் விபத்துக்குள்ளானது.

கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, ரெயிலானது தடம்புரண்டது. 14 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 500-க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120-ஐ எட்டியுள்ளது. 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தினை ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு மாலை 7.30 மணியளவில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

120 பேர் பலி கொண்ட இந்த ரெயில் விபத்து நாட்டினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News