செய்திகள்

பட்ஜெட் குறித்து பேஸ்புக் மூலம் கருத்து தெரிவியுங்கள்: மக்களுக்கு கேரள எதிர்க்கட்சி வலியுறுத்தல்

Published On 2017-01-15 15:02 GMT   |   Update On 2017-01-15 15:02 GMT
கேரள மாநிலத்தில் வரும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு, கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பேஸ்புக் மூலம் மக்கள் கேள்வி மற்றும் ஆலோசனைகளை அளிக்க வேண்டும் என கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தியுள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை கூடுகிறது. அப்போது மாநில நிதிமந்திரி பட்ஜெட் தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக கருத்து கூறியுள்ள ரமேஷ் சென்னிதாலா ‘‘மக்கள் பட்ஜெட் குறித்த கருத்து மற்றும் கேள்விகளை பேஸ்புக் மூலமாக அதிக அளவில் கேட்க வேண்டும். கடந்த காங்கிரஸ் அரசில், 1000-க்கும் அதிகமான கேள்விகள் தனக்கு பேஸ்புக் மூலமாக வந்தது.

அதில் சில கேள்விகளை எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்பு கேள்விகளாக சட்டசபையில் கேட்டுள்ளனர். இம்முறையும் அதே போல மக்கள் தங்களது கேள்வி மற்றும் ஆலோசனைகளை அனுப்ப வேண்டும். அவர்களது ஆலோசனைகள் எதிர்க்கட்சி தலைவர்களின் உரைகளில் இடம்பெறும்” என கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை, மக்களையும் அரசையும் இணைக்கும் ஜனநாயக ரீதியான அணுகுமுறை எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News