செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்து

Published On 2017-01-25 11:43 GMT   |   Update On 2017-01-25 11:43 GMT
ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்துவரும் கடுமையான பனிப்பொழிவால் இரண்டாவது நாளாக இன்றும் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள விமானநிலையத்தில், ஓடுதளமே தெரியாத வகையில் கடும் பனி மூட்டம் நிலவிவந்ததால் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து, ஸ்ரீநகருக்கு வரும் விமானங்கள் மற்றும் ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் மற்றும் விமானங்கள் நேற்று இயக்கப்படவில்லை.

இதற்கிடையே, போதுமான அளவில் விமானங்கள் இயக்கப்படாததால் காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், இன்றும் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இன்றும், பனிப்பொழிவு நீடிக்கும் பட்சத்தில் நாளையும் விமானச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News