செய்திகள்

மோடியின் வெளிநாடு விமான பயண கட்டணம் ரூ.119 கோடி - பிரதமர் அலுவலகம் செலுத்தியது

Published On 2017-02-01 07:24 GMT   |   Update On 2017-02-01 07:24 GMT
பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களான விமான கட்டண நிலுவை தொகை ரூ.119.70 கோடியை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பிரதமர் அலுவலகம் செலுத்தி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் 14-வது பிரதம மந்திரியாக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு மே 26-ந்தேதி பதவி ஏற்றார். பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மோடி அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற் கொண்டு வருகிறார்.

மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ்பத்ரா விவரங்களை கேட்டு இருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்து இருந்தது. அதில் மோடி இதுவரை 27 வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாகவும் 8 பயணத்துக்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கட்டண தொகையாக ரூ.119.70 கோடி செலுத்த வேண்டி உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது.

இதையடுத்து ஏர் இந்தியாவுக்கு நிலுவை தொகையை உடனே செலுத்தக் கோரி அவர் தலைமை தகவல் ஆணையத்தில் முறையீடு செய்தார். இதை விசாரித்த தலைமை தகவல் ஆணையம் ஆர்.கே. மாத்தூர் பிரதமரின் பயணக் கட்டணங்கள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்துடன் தொடர்புடையது. எனவே அதனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களான விமான கட்டண நிலுவை தொகை ரூ.119.70 கோடியை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பிரதமர் அலுவலகம் செலுத்தி உள்ளது. இது பிரதமர் அலுவலக வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், லாவோஸ், மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, தன்சானியா, கென்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளுக்கான நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளது.

Similar News