செய்திகள்

இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.5 சதவீதமாக உயரும்: பிரணாப் முகர்ஜி

Published On 2017-03-02 21:18 GMT   |   Update On 2017-03-02 21:18 GMT
இந்தியாவின் பொருளாதாரம் இந்த நிதி ஆண்டில் 7.5 சதவீதமாக உயரும் என்று கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கொச்சி:

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று கொச்சியில் நடைபெற்ற ஆறாவது கே.எஸ்.ராஜமோனி நினைவு சொற்பொழிவு  நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். இந்தியா@70 என்ற தலைப்பில் பேசிய பிரணாப் முகர்ஜி சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில்  இந்தியாவின் பொருளாதார விகிதத்தை விவரித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,

இந்த ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதமாக உயரும் என்று கூறினார். 50 வருடங்களுக்கு முன்பு இந்தியா சுதந்திரம் அடைந்த  போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 0 முதல் 1 சதவீதமாக இருந்தது.

அதுவே பின்னர், 1950-களில் 1-2 சதவீதமாக உயர்ந்தது. 1960-ல் அதன் வளர்ச்சி 3-4 சதவீதமாக உயர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.  அதுவே பின்னர் 1990-களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் 6 முதல் 7 சதவீதமாக உயர்ந்தது. கடந்த 15 ஆண்டுகளில் இந்திய  பொருளாதாரம் வேகமாக 7 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது, இந்தியாவை உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக  மாற்றியுள்ளது என்றார். மேலும் 2017-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த பொருளாதார விகிதம் அரை சதவீதம் உயரும் என்றும் பிரணாப்  தெரிவித்தார்.



இந்த பொருளாதார உயர்வுக்கு விவசாயிகளும், தொழிலாளர்களும் முக்கிய காரணமாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  கொச்சியில் தனது பயணத்தை முடித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.

சென்னை, தாம்பரத்தில் உள்ள, இந்திய விமானப்படை தளத்தில், சிறந்த வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, இன்று காலை நடக்கிறது.  இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.

Similar News