செய்திகள்

இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை

Published On 2017-03-22 09:57 GMT   |   Update On 2017-03-22 09:57 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்குட்பட்ட முசாபர்நகர் பகுதியில் இறைச்சிக்காக பசுவை வெட்டிக் கொன்ற இருவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லக்னோ:

இறைச்சிக்காக பசுக்களை வெட்டிக் கொல்ல உத்தரப் பிரதேசம் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பசு கடத்தலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்குள்ள ஷாம்லி மாவட்டத்துக்கு உட்பட்ட ஜுஞ்சாலா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதி வழியாக ஒரு லாரியில் பசு இறைச்சி ஏற்றிச் சென்ற இருவரை கடந்த 27-1-2012 அன்று போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது முசாபர்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் ஐந்தாண்டு சிறை தண்டனையும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Similar News