செய்திகள்

ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுமா? டெல்லி மேல்-சபையில் மத்திய மந்திரி பதில்

Published On 2017-04-05 22:49 GMT   |   Update On 2017-04-05 22:49 GMT
ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அது வெறும் வதந்தி தான் என மத்திய உள்துறை விவகார இணை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
புதுடெல்லி:

டெல்லி மேல்-சபையில் காங்கிரஸ் எம்.பி. மதுசூதன் மிஸ்ட்ரி கேள்வி நேரத்தின்போது, ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெறும் என்று தகவல் பரவி வருகிறதே?. அது உண்மையா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை விவகார இணை மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியதாவது:-

மத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அது வெறும் வதந்தி தான். ரூ.2,000 கள்ள நோட்டுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய ரூ.2,000 நோட்டுகளில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. எனவே 100 சதவீதம் அதை கள்ள நோட்டாக தயாரிக்க முடியாது. அப்படியே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வந்தாலும் அதை எளிதாக கண்டறியலாம். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்திய எல்லையில் உள்ள மேற்கு வங்காளம், குஜராத், அசாம் போன்ற மாநிலங்களில் தான் அதிக அளவில் ரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டுகள் பிடிபட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார். 

Similar News