செய்திகள்

தந்தையின் டீ கடையில் வேலை செய்யும் பளுதூக்கும் வீராங்கனை - வேலை கொடுக்குமா அரசு?

Published On 2017-05-11 15:38 GMT   |   Update On 2017-05-11 15:51 GMT
பளுதூக்கும் போட்டிகளில் பல்வேறு சாம்பியன் பட்டங்களை வென்ற அரியானா வீராங்கனை தந்தையின் டீ கடையில் வேலை செய்து வருகின்றார்.
ராஞ்சி:

அரியானா மாநிலம் சோனாபட் பகுதியை சேர்ந்தவர் பளுதூக்கும் வீராங்கனை சந்தோஷ். இவர் பளுதூக்கும் போட்டிகளில் தேசிய அளைவில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். 



வீராங்கனை சந்தோஷின் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். அவரது தந்தை சிறிய டீ கடை ஒன்றினை நடத்தி வருகின்றார்.

இதனிடையே, பயிற்சியின் போது தீடிரென அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தொடர்ச்சியாக பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனையடுத்து, வீராங்கனை சந்தோஷ் தற்போது தந்தையின் டீ கடையில் அவருக்கு உதவியாக வேலைகள் செய்து வருகின்றார்.

தனது நிலை குறித்து சந்தோஷ் கூறுகையில், “பயிற்சியின் போது எனக்கு காயம் ஏற்பட்டது. அதனால் என்னால் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. நான் நிறைய சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளேன். அரசு எனக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.



நம்முடைய நாட்டில் விளையாட்டு துறையில் ஏழ்மை நிலையில் உள்ள வீரர்கள் தொடர்ந்து விளையாட்டில் நீடிக்க முடியாத அவல நிலை உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
Tags:    

Similar News