செய்திகள்

மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு மக்களுக்கு எதிரானது - அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2017-09-28 07:51 GMT   |   Update On 2017-09-28 07:51 GMT
டெல்லி மெட்ரோ ரெயிலின் கட்டணத்தை உயர்த்துவது மக்களுக்கு எதிரான முடிவு என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் அடுத்த மாதத்திலிருந்து ரெயில் கட்டணம் மேலும் 10 ரூபாய் வரை உயர்த்தப்படும் என அறிவித்தது. இந்த கட்டண உயர்வு வரும் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இது மக்களுக்கு எதிரானது கூறியுள்ளார். இந்த கட்டண உயர்வு பிரச்சனைக்கு போக்குவரத்து மந்திரி கைலாஷ் காக்லாட் ஒரு வாரத்திற்குள் சுமூகமான முடிவு எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் பேசுகையில், கட்டண உயர்வை தடுப்பதற்கு அரசு முடிந்த வரை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து மந்திரி விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என கூறினார்.

இந்த ஆண்டு இரண்டாவது முறையாக கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கு முன் கடந்த மே மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News